ஈரோடு ஈ. பி. பி. நகர் பகுதியில் துணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு லாரி நேற்று காலை கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு சத்தி ரோடு சிக்கய்ய அரசு கல்லூரி அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து துணிகளை ஏற்றிக்கொண்டு ஈ. பி. பி. நகருக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. வளைவில் திரும்ப முயன்றபோது லாரி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. லாரி ஓட்டுநரும் காயமின்றி தப்பினார். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.