மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சபரீசன் (26), நேற்று (மே 25) காலை சேலத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரியில் கோவை சென்று கொண்டிருந்தார். சித்தோடு அருகே சமத்துவ மேடு பகுதியில் ட்ரெய்லர் லாரியின் மீது மோதியதில் சபரீசன் உயிரிழந்தார். பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரது உடலை மீட்டு சித்தோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரது உடல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.