திருப்பூர் மாவட்டம் பெரிய ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த நடராஜன் (75) என்பவர், சின்ன ஒட்டர்பாளையத்தில் ஆடு, எருமைகளை மேய்க்கச் சென்றபோது, காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே அவரது கைத்தடி கண்டெடுக்கப்பட்டது. பின்னர், கிணற்றில் இறங்கித் தேடிய தீயணைப்புத்துறையினர், நடராஜனின் சடலத்தை மீட்டனர். வயது மூப்பின் காரணமாக தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.