பவானி: காவிரி ஆற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

880பார்த்தது
பவானி: காவிரி ஆற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சிங்கம்பேட்டை அருகே காட்டூரைச் சேர்ந்த 99 வயதான வள்ளியம்மாள், நேற்று முன்தினம் ஆற்றில் குளிப்பதற்காக மாரியம்மன் கோயில் படித்துறைக்குச் சென்றுள்ளார். வயது மூப்பின் காரணமாக தவறி ஆற்றில் விழுந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி