ஈரோட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில்
நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தி
ல், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி. சந்திரகுமார், ஈரோடு எம்பி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்குவதற்கு எம்பி பிரகாஷ் அறிவித்தபோது, மாவட்ட செயலாளர் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவது மரியாதை இல்லை என கூறப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த எம்பி பிரகாஷ், மேடையிலேயே திமுக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.