ஈரோடு: போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

78பார்த்தது
ஈரோடு: போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்
ஈரோடு மாநகர பகுதியில் தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகர பகுதியில் தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மது போதையில் வாகனம் இயக்கியதாக 38 வழக்கு, சிக்னலை மீறியதாக 56 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 535 வழக்கு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 111 வழக்கு, உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 21 வழக்கு, காப்பீடு இல்லாதது 104 வழக்கு என 1, 165 வழக்குகள் பதிவு செய்து வாகன உரிமையாளர்களிடம் அபராதமாக ரூ. 3. 42 லட்சம் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் இயக்கிய 15 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.