ஈரோடு அடுத்த நரிப்பள்ளத்தில் ஷேம்தாகா என்பவருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூன் 6) மதியம் மில்லில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் மறுசுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பஞ்சில் மளமளவென்று தீ பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து வந்த ஈரோடு தீயணைப்புத்துறையினர், கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான இயந்திரம் சேதமானதோடு, ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட வேஸ்ட்டேஜ் பஞ்சுகள் சாம்பலானது.