பவானியில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

59பார்த்தது
பவானியில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி ஆண்டிகவுண்டன்புதூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். 

அங்கு பகு ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கியதாக அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 1,950 கிலோ ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி