ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கங்காபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (45) என்பவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, டெக்ஸ்டைல் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.