பவானி அருகே கவுந்தப்பாடியில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தல் பணிகளைத் தொடங்கவும், கூட்டணிகளை வலுப்படுத்தவும் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி. கருப்பணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.