ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆப்பக்கூடல் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு, திமுக அரசின் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரமாக கூட்டணிகள் அமைத்து தொகுதி பங்கீடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.