ஈரோடு மார்க்கெட்டிற்கு 8 டன்கள் மீன்கள் வரத்து

74பார்த்தது
ஈரோடு மார்க்கெட்டிற்கு 8 டன்கள் மீன்கள் வரத்து
ஈரோடு ஸ்டோன் பாலம் மீன் மார்க்கெட்டிற்கு, காரைக்கால், தூத்துக்குடி, ராமேஸ்வரம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் கொண்டு வரப்படும். குறிப்பாக, 40 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மீன் பிடித் தடைக்காலம் அமலில் இருந்து வந்ததால் மீன்கள் வரத்து குறைவாக வந்தது. இதன் எதிரொலியாக மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மீன் பிடித்தடைக்காலம் நிறைவடைந்தது. இதனால், நேற்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இருப்பினும், நேற்று கூடிய சந்தையில் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. கேரளாவில் இருந்து மட்டும் வெறும் 8 டன்கள் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தன. 

இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன்கள் ரூ. 25 முதல் 50 வரை உயர்ந்துள்ளது. அதேபோன்று, ஒரு சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட நேற்று ரூ. 100 வரை குறைந்திருந்தது. ஒரு கிலோ வஞ்சரம், ஒரு கிலோ வெள்ளை வாவல் மீன்கள் தொடர்ந்து கிலோ ரூ. 1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி