ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தைச் சேர்ந்த 59 வயது கூலித்தொழிலாளி சுப்பிரமணி, மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி மனைவி ஜெயந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.