சத்தியமங்கலம்: ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை

5பார்த்தது
சத்தியமங்கலம்: ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை
சத்தியமங்கலம் அருகே மாராயிபாளையம் கிராமத்தில், வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, வீட்டின் வெளியே கட்டியிருந்த ஆட்டை அடித்துக் கொன்றது. வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்து, அது சிறுத்தைதான் என்பதை உறுதிப்படுத்தினர். குடியிருப்புகளுக்கு அருகில் மலைக்குன்றில் சிறுத்தை படுத்திருந்ததை கண்காணித்த வனத்துறையினர், அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.