தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் பவானி கூடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தொகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.