ஈரோடு அலுவலகத்தில் பல்வேறு தொழில் துறையினர் தங்கள் பிரச்சினைகள் குறித்து நைனார் நாகேந்திரனிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, போலீஸ்காரர் வெட்டப்பட்டது, போதை மருந்து விற்பனை போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், முதல்வர் தன் மகனை ஆக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். உள்ளாட்சிகளில் 888 கோடி, லாரி போக்குவரத்தில் 130 கோடி ஊழல் நடந்ததாகவும், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சுதந்திரமான அமைப்புகள் என்றும் கூறினார். தஞ்சை டெல்டாவில் நெல் கொள்முதல் மையங்கள் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும், திமுகவினர் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.