பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

424பார்த்தது
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 14வது மருத்துவ முகாம் திங்களூரில் நடைபெற்றது. இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு கண், பல், ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ் ரே, மற்றும் பெண்களுக்கு கர்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்தனர். மேலும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, காசநோய் ஊட்டச்சத்து தொகுப்பு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை, மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி