பவானியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

1பார்த்தது
பவானியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி பழைய பாலப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் கொமராபாளையத்தைச் சேர்ந்த ரவி (29) மற்றும் சேலம் மணியனூரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (30) ஆகியோரை பவானி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் இரு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இவர்கள் பிடிபட்டனர்.

தொடர்புடைய செய்தி