பவானி அருகே சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நசியனூர் அப்பத்தாள்கோவில் பகுதியில், மருத்துவர்களின் பரிந்துரை இன்றி ஆன்லைனில் சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். நம்பியூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (30) மற்றும் ஸ்ரீதர் (20) ஆகியோரிடமிருந்து 100 வலி நிவாரணி மாத்திரைகள், இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.