கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்

1பார்த்தது
கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்
சித்தோடு காவல் நிலைய போலீசார், காளிங்கராயன் பாளையம் சக்தி நகர் பகுதியில் கஞ்சா கடத்திய அப்துல் ரகுமான் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ 800 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர்கள் ஆந்திர மாநிலம் வைசாக், விஜயவாடா பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி