ஈரோடு: மதுபோதையில் மனைவியுடன் தகராறு; தொழிலாளி தற்கொலை

1322பார்த்தது
ஈரோடு: மதுபோதையில் மனைவியுடன் தகராறு; தொழிலாளி தற்கொலை
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, மதுபோதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளி சம்பத் (43) தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி கோகிலா, உறவினர்களுடன் சேர்ந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி