வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

7பார்த்தது
வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மற்றும் பவானி காவல் நிலைய எல்லைகளில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட கோழிகரண் @ ராகவன் (25) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பவானி கிளை சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி