தங்க நகை திருடிய வாலிபர் கைது

2பார்த்தது
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், வெயில் காரணமாக கதவைத் திறந்து வைத்து உறங்கிய விவேகானந்தன்-கலைச்செல்வி தம்பதியினர் வீட்டில், 11 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றார். CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சித்தோட்டைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பவரை அடையாளம் கண்டனர். தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த அவரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நகைகளை மீட்டனர்.