தாளவாடி: 4 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி

63பார்த்தது
தாளவாடி: 4 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ராஜகோபால் சுந்தரா ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி சத்தியமங்கலம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்ட போது அந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி அர்ச்சனா கலெக்டரிடம் தனது சொந்த ஊரான தாளவாடி ஊராட்சி ஒன்றியம், பெஜவாடி கிராமத்திற்கு சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுந்தரா உத்தரவின் பேரில் பெஜவாடி, தாளவாடி மற்றும் ஈரட்டி ஆகிய கிராமங்களில் வாழும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.88 கோடி மதிப்பீட்டில் பெஜவாடி முதல் ஈரட்டை வரை சுமார் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணி மாணவி அர்ச்சனா முன்னிலையில் தொடங்கப்பட்டது. இதற்கான பணி தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

தொடர்புடைய செய்தி