புளியம்பட்டி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

52பார்த்தது
புளியம்பட்டி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராமன் இவரது மகன் மணிகண்டன் - 22, திருமணமாகி மனைவியும், 1 -1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் வீட்டில் சேலையால் தூக்கிட்டு இறந்து போய் உள்ளார். தகவல் அறிந்து சென்ற புளியம்பட்டி போலீசார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் இறப்பிற்கான காரணம் குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி