ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால் மூலம் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 90.28 அடியாக உள்ளது. அணையில் 21.76 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 121 கன அடி நீர்வரத்து உள்ளது. பாசனத்திற்காக LBP கால்வாய்க்கு 2300 கன அடி, ஆற்றில் 900 கன அடி, குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 3300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.