ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே ஒசட்டி மலைக் கிராமத்தில் மின் கம்பங்களில் கம்பிகள் அறுந்து தொங்குவதால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின் கம்பங்களுக்கு கீழே வீடுகள் இருப்பதால், கம்பிகள் அறுந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்படக்கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர். மின்துறை ஊழியர்கள் உடனடியாக சீரமைத்து மின் விநியோகத்தை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.