ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கோபி கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வி.பி. தமிழ்செல்வி 72,391 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் அதிமுக வேட்பாளரை விட 4579 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.