ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் பகுதியில் சரவணன் என்ற விவசாயியின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த கால்நடை சிறுத்தை தாக்கி இறந்து கிடந்தது. வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை தாக்கியது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த கால்நடைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.