ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரேபாளையம் கிராமத்தில் மகேஷ் என்ற விவசாயியின் 4 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் புகுந்து கரும்புகளை சேதப்படுத்தின. விவசாயி மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை விரட்ட முயன்றும் அவை தொடர்ந்து சேதாரம் செய்தன. அதிகாலை யானைகள் வனப்பகுதிக்கு சென்றன. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 2 ஏக்கர் கரும்பு யானைகளால் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.