தாளவாடி பகுதியில் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்

567பார்த்தது
தாளவாடி பகுதியில் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்
சத்தியமங்கலம் மல்லன்குழி கிராமத்தில், மாதேவப்பா என்பவரின் விவசாய தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தோட்டத்தில் இருந்த யானைகள், 200க்கும் மேற்பட்ட வாழைகளையும், பைப்லைனையும் சேதப்படுத்தின. வனத்துறையினர் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் விவசாய நிலங்களில் புகுவது தொடர்கதையாகி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி