இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

3பார்த்தது
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மோகன் நவாஸ் தலைமையில், மலைக்கிராம இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப். 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் டிவிஎஸ் குழும நிர்வாகிகள் வெங்கடேஷ் மற்றும் அரவிந்தன் பங்கேற்று நேர்காணல் நடத்தினர். 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்ட நிலையில், 24 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி