ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சொந்த காலில் நிற்கும் கட்சி அதிமுக. யாருக்கும் அதிமுக பயப்படாது. அதிமுக சுதந்திரமாக செயல்படும் தன்மானமுள்ள கட்சி. அதிமுகவை பற்றி முதல்-அமைச்சர் பாஜகவுக்கு அதிமுக அடிமை என்று மு.க.ஸ்டாலின் அவதூறு பேசுகிறார். மேலும்அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.