ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ. தி. மு. க நிர்வாகிகளை, பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசசாமி நீக்கியுள்ளார்.
அ. தி. மு. க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ. தி. மு. க புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி. வி. சிவக்குமார், அந்தியூர் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். பிரவீன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கட்சி நிர்வாகிகள் யாரும் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.