ஈரோடு: மயங்கி விழுந்த யானைக்கு மூன்றாம் நாளாக சிகிச்சை

548பார்த்தது
ஈரோடு: மயங்கி விழுந்த யானைக்கு மூன்றாம் நாளாக சிகிச்சை
தாளவாடியில் கடந்த வியாழன் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, முதியனூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து திடீரென மயங்கி விழுந்தது. வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் சிகிச்சை அளித்தும், கிரேன் மூலம் தூக்கியும் யானையால் எழ முடியவில்லை. நள்ளிரவில் வந்த மற்ற இரு யானைகள் எழுப்ப முயன்றும் தோல்வியடைந்தன. யானைக்கு கரும்பு, பழம், மக்காசோளம் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி