யானைகளின் கூட்டம் விவசாயிகள் அதிர்ச்சி

1பார்த்தது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்தின் கீழ், தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள அருள்வாடி கிராமம் அருகே யானைக் கூட்டங்கள் உலா வருகின்றன. நேற்று காலை கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், அருள்வாடி கிராமத்தின் மானாவாரி நிலங்களில் சுற்றித் திரிந்ததால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், அவை விவசாய நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்க அகழிகள் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி