சத்தியமங்கலத்தில் மளிகை கடையில் தீ விபத்து

77பார்த்தது
சத்தியமங்கலத்தில் மளிகை கடையில் தீ விபத்து
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோபி மெயின் ரோட்டில் மளிகை கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று (ஜூன் 6) இரவு வியாபாரம் முடிந்ததும் கடை பூட்டப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர். கடையில் வேலை பார்க்கும் நூர் என்பவர் கடையின் முன்பு படுத்திருந்தார். அப்போது நள்ளிரவு 2.30 மணி அளவில் கடையிலிருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மளிகை கடை அருகே வங்கி செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் ஒரே நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் மளிகை கடையில் உள்ள சில பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி