தாளவாடி காளிதிம்பம் மலை கிராமத்தில் வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில், முதன்முறையாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கிராமத்திற்கு வருகை தந்து மக்களின் குறைகளை கேட்டறிந்த நிலையில், பேருந்து வசதி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை ஆசனூர் திமுக ஒன்றிய செயலாளர் நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.