ஈரோடு: மரம் மின் கம்பம் மீது விழுந்து மின்சாரம் துண்டிப்பு

75பார்த்தது
ஈரோடு: மரம் மின் கம்பம் மீது விழுந்து மின்சாரம் துண்டிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டியது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்தன. இந்த நிலையில் தாளவாடியை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதலே கடும் வெயில் வாட்டியது. பின்னர் மதியத்துக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து மின்கம்பத்தின் மேல் விழுந்ததில் அப்பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. 

இது குறித்து மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி