ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் (டிசம்பர் 26) பூக்கள் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலவரம்: விலை கிலோவுக்கு மல்லிகை: 1600/2340 முல்லை: 635/1020 காக்கடா: 500/875 செண்டு: 11/69 கோழி கொண்டை: 86/145 ஜாதி முல்லை: 750 கனகாம்பரம்: 700 அரளி: 220 துளசி: 40 செவ்வந்தி: 160