ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் அருகே, சிறுத்தை ஒன்று விவசாயியின் கன்றுக்குட்டியை தூக்கிச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்டர் தொட்டியைச் சேர்ந்த முத்து என்பவர் வளர்த்து வந்த மூன்று கன்றுக்குட்டிகளில், கடந்த மாதம் இரண்டு குட்டிகளை சிறுத்தை இழுத்துச் சென்றது. தற்போது மீதமிருந்த ஒரு கன்றுக்குட்டியையும் நேற்று இரவு சிறுத்தை தாக்கி தூக்கிச் சென்றுள்ளது. தொழவத்தில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிந்திருந்தன. இதனால் அச்சமடைந்த விவசாயிகள், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.