மரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை புலி

0பார்த்தது
மரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை புலி
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகின்றன. நேற்று மாலை ஆசனூர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் சிறுத்தை படுத்திருந்தது. இதை அவ்வழியாக சென்ற பயணிகள் வீடியோ எடுத்தனர். பட்டபகலில் சாலையில் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திம்பம், ஆசனூர், கேர்மாளம் சாலையில் சிறுத்தை தொடர்ந்து உலா வருவதால், வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தவோ, இறங்கவோ கூடாது என்றும், எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி