ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று இரவு, புதுப்பீர்கடவு பிரிவு அருகே பட்டரமங்களம் செல்லும் சாலையில் ஒரு சிறுத்தை நடந்து சென்றது. அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் செல்போன்களில் சிறுத்தையின் படத்தைப் பிடித்து, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படங்களை அனுப்பி எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.