புஞ்சை: ரம்ஜான் முன்னிட்டு கால்நடைகள் மொத்தம் ரூ1 கோடிக்கு விற்பனை

67பார்த்தது
புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி வாரச் சந்தைக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு எருமை மாடுகள், 1000 கலப்பின மாடுகள், 300 கன்றுக்குட்டிகள் மற்றும் சிந்து, நாட்டுமாடு உள்ளிட்ட வகைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

எருமைமாடு ஒன்று ரூ. 14 ஆயிரம் முதல் ரூ. 21 ஆயிரம் வரையும் விலை பேசப்பட்டது. கலப்பின மாடு ஒன்று ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 24 ஆயிரம் வரையும், ஜெர்சிமாடு ஒன்று ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் வரையும், சிந்து மாடு ஒன்றுக்கு ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 26 ஆயிரம் வரையும், நாட்டுமாடு ஒன்று ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரையும் விலை பேசப்பட்டது. மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது. அதேபோல் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டுவரப்பட்டன. இதில் வெள்ளாடு ஒன்று ரூ. 8 ஆயிரம் வரையும், செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் வரையும் என மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கு விலை போனது.

தொடர்புடைய செய்தி