ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீசார் வடக்குப்பேட்டையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டை ஆன்லைனில் விற்றதாக பெரியசாமி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ. 6 ஆயிரத்து 200 மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.