தாளவாடியில் கர்நாடகா மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது

0பார்த்தது
தாளவாடியில் கர்நாடகா மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
ஈரோடு மாவட்ட தனிப்பிரிவு போலீசார் நேற்று தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பனக்கள்ளி, கல்மண்டிபுரம், ஏரகனள்ளி, சிமிட்டஹள்ளி, பாளையம், திகனாரை, தொட்டகாஜனூர் ஆகிய கிராமங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொட்டகாஜனூர் கிராமத்தில் சித்துராஜ் (27) என்பவரின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 167 கர்நாடக மது பாக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 8400 பணத்தை பறிமுதல் செய்து, சித்துராஜ்யை கைது செய்தனர்.