ஈரோடு: ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

70பார்த்தது
ஈரோடு:  ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோணமூலை ஊராட்சியில் நஞ்சப்பகவுண்டன்புதூரில் ரூ. 30 லட்சத்து 10 ஆயிரத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இதன் திறப்பு விழா நேற்று (ஜனவரி 2) நடைபெற்றது. 

விழாவுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அப்துல் வகாப், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.ஆர் இளங்கோ கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் புதிய அலுவலகத்தில் இதிகுத்து விளக்கு ஏற்றப்பட்டது. 

இதில் உதவி பொறியாளர் விஜயராகவன், ஊராட்சி உறுப்பினர்கள் ராதா, ஜனளி, முருகாயாகள், மாரிமுத்து, தாமரைச்செல்வன், ஊராட்சி செயலாளர் அருண்குமார், தி.மு.க. தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் அசோகன் மற்றும் ஊராட்சித் தலைவர்கள், பொதுமக்கள் திரளாகவினர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி