பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு தண்ணீர் குறைப்பு

1பார்த்தது
பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு தண்ணீர் குறைப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 89.05 அடியாகவும், சேமிப்பு 20.97 டிஎம்சியாகவும் உள்ளது. 24 மணி நேர சராசரி நீர்வரத்து 195 கனஅடியாகவும், தற்போதைய நீர்வரத்து 119 கனஅடியாகவும் பதிவாகியுள்ளது. அணையில் இருந்து LBP கால்வாய்க்கு 1900 கனஅடி, ஆற்றில் 900 கனஅடி, குடிநீருக்கு 100 கனஅடி என மொத்தம் 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காலிங்கராயன் கால்வாய்க்கு நீர் திறக்கப்படவில்லை. மழைப்பொழிவு ஏதும் பதிவாகவில்லை.

தொடர்புடைய செய்தி