சத்தியமங்கலம் வணிக வளாக கழிவறை திறக்க கோரிக்கை

840பார்த்தது
சத்தியமங்கலம் வணிக வளாக கழிவறை திறக்க கோரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள இ-சேவை மையங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை வசதி இன்றி அவதிப்படுகின்றனர். வணிக வளாகத்தின் இருபுறமும் கழிவறைகள் இருந்தும் அவை பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவறைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி