ஈரோடு: பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

85பார்த்தது
ஈரோடு: பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
தலைமை ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நடுப்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 

இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வன், இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின் குறைந்த அளவே படித்து வந்த மாணவர் எண்ணிக்கை நாளடைவில் படிப்படியாக உயர்ந்து 88 மாணவர், மாணவிகள் பயிலும் பள்ளிக்கூடமாக மாறியது. இந்தநிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கடம்பூர் மலை பகுதியில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டார். நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள், தலைமை ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசாரும், உதவி தொடக்கக்கல்வி அலுவலரும் மாணவர்கள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உயர் அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி